அதன் பிறகு மண்டேலா, சார்பட்டா பரம்பரை மற்றும் மகாமுனி ஆகிய படங்களில் அவருக்கு முக்கியமான வேடங்கள் கிடைத்தன. இப்போது அவர் அஜித்தோடு நடித்துள்ள வலிமை திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் அஜித் உடன் நடித்த அனுபவம் குறித்து பேசியுள்ள அவர் நான் வலிமையில் அஜித்துடன் நடிக்கும் போது உங்களோடு நடிப்பது எனக்கு மிகவும் பெருமையான விஷயம் எனக் கூறினேன். அதற்கு அவர் அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. உங்களை எப்படி ஒரு இயக்குனர் தேர்ந்தெடுத்து இருக்கிறாரோ அப்படிதான் என்னையும் இயக்குனர் தேர்ந்தெடுத்ததால் நானும் இங்கு இருக்கிறேன் எனக் கூறியுள்ளார்.