வடிவேலை இமிடேட் செய்யும் நடிகர்

Webdunia
புதன், 4 ஜனவரி 2017 (12:09 IST)
வடிவேலின் பாடிலங்வேஜும், அவரது காமெடி ஸ்டைலும் யாரையும் சிரிக்க வைக்கும். சமயத்தில் விவேக்கே வடிவேலை  இமிடேட் செய்வார். ஒரு படத்தில் வடிவேலை காமெடி நடிகர் வேண்டுமென்றே இமிடேட் செய்திருக்கிறார். அந்தப் படம்,  நாகேஷ் திரையரங்கம்.

 
ஆரி நாயகனாக நடித்துவரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூந்தாமல்லியில் உள்ள திரையரங்கில் நடந்து வருகிறது. இதில் காளி  வெங்கட் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
 
படம் குறித்துப் பேசிய ஆரி, காளி வெங்கட் இந்தப் படத்தில் வடிவேலை இமிடேட் செய்துள்ளதாகவும், காமெடி சிறப்பாக  வந்துள்ளதாகவும் கூறினார். காளியின் காமெடி சும்மாவே சிறப்பாக இருக்கும். வடிவேலை இமிடேட் செய்திருக்கும் காமெடி  நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் என நம்புவோம்.
அடுத்த கட்டுரையில்