கே.வி.ஆனந்த் படத்துக்காக காலை காயப்படுத்திய விஜய் சேதுபதி

செவ்வாய், 23 ஆகஸ்ட் 2016 (16:35 IST)
விஜய் சேதுபதி போன்று ஒரு சின்சியர் நடிகரை பார்ப்பது அரிது. புகழின் உச்சியில் இருந்தாலும் தன்னடக்கத்தை தலையணையாக வைத்து உறங்குகிறவர்.


 
 
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி, டி.ராஜேந்தர் நடிக்கும் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு இந்த மாத ஆரம்பத்தில் முடிந்தது. அந்த படப்பிடிப்பின் போது விஜய் சேதுபதியின் காலில் காயம்பட்டது. 'நீ கேப்' அணிந்துதான் மீதி காட்சிகளில் நடித்தார். 
 
அந்த காயத்துடன்தான் றெக்க படத்தின் பாடல் காட்சிக்காக பாங்காக் சென்றார் விஜய் சேதுபதி. அங்கு ஒரு பாடல் காட்சியை படமாக்கினர். 
 
அகராதியில் சின்சியர் என்பதற்கு விஜய் சேதுபதி என்று பொருள் தரலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்