முதல்முறையாக கொள்கையை தளர்த்திய நயன்தாரா. கோலிவுட் ஆச்சரியம்

சனி, 25 மார்ச் 2017 (06:52 IST)
ஒரு படத்தில் கமிட் ஆகும்போதே அந்த படத்தின் புரமோஷன் உள்பட எந்த விளம்பரத்திற்கும் வர முடியாது என்று கூறுபவர் நடிகை நயன்தாரா. இதற்கு ஒப்புக்கொண்டுதான் அவரிடம் கால்ஷீட் பெறுகின்றன இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும்.




 




ஆனால் முதல்முறையாக இந்த கொள்கையை சற்று தளர்த்தியுள்ளார் நயன்தாரா. சென்னையில் உள்ள முக்கிய நகரங்களில் 'டோரா' படத்தில் இடம்பெறும் கார் போன்று சில கார்களை நிறுத்தி வைக்க படக்குழு ஏற்பாடு செய்துள்ளது. இந்த காரில் உட்கார்ந்து செல்பி எடுத்து அனுப்புபவர்களில் குலுக்கல் முறையில் ஒருசிலர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு நயன்தாராவுடன் செல்பி எடுக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று விளம்பரப்படுத்தியுள்ளனர் படக்குழுவினர்

இந்த செல்பி ஐடியாவை நயன்தாரா பாராட்டியதோடு, செல்பி எடுக்கவும் ஒப்புக்கொண்டுள்ளார். புரமோஷனுக்கே வரமுடியாது என்ற கொள்கையுடைய நயன்தாரா, இந்த புரமோஷனுக்கு ஒப்புக்கொண்டது ஆச்சரியம் தான் என்கின்றனர் கோலிவுட் திரையுலகினர்.

வெப்துனியாவைப் படிக்கவும்