“ரசிகர்கள் திட்டுவதால் பிரேம்ஜியை நடிக்க வைக்கவில்லை” - வெங்கட் பிரபு

வியாழன், 16 நவம்பர் 2017 (10:00 IST)
‘ரசிகர்கள் திட்டுவதால் ‘பார்ட்டி’ படத்தில் பிரேம்ஜியை நடிக்க வைக்கவில்லை’ என வெங்கட் பிரபு கூறியுள்ளார்.

 
இதுவரை வெங்கட் பிரபு இயக்கிய எல்லா படங்களிலும், அவருடைய தம்பியான பிரேம்ஜி நடித்துவிடுவார். ஆனால், அவர் தற்போது இயக்கிவரும் ‘பார்ட்டி’ படத்தில் பிரேம்ஜி நடிக்கவில்லை. அதற்குப் பதிலாக, இசை அமைக்கிறார்.
 
இதுகுறித்து வெங்கர் பிரபுவிடம் கேட்டபோது, “பிரேம்ஜி நன்றாக நடிக்கிறார். ஆனாலும், என்னுடைய ரசிகர்கள் அவரை நடிக்க  வைக்க வேண்டாமெனத் திட்டுகிறார்கள். அவர்களின் விருப்பத்துக்கு மதிப்பு கொடுத்து இந்தப் படத்தில் பிரேம்ஜியை நடிக்க  வைக்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்