பிரபல நகைச்சுவை நடிகரின் தாயார் மரணம்

புதன், 1 நவம்பர் 2017 (13:01 IST)
பிரபல நகைச்சுவை நடிகரும், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளருமான இமான் அண்ணாச்சியின் தயார் இன்று  காலமானார். 

 
பிரபல தொலைக்காட்சியில் நடத்தும் சின்ன குழந்தைகளின் ஒரு நிகழ்ச்சி மக்களிடையே மிகவும் பிரபலம். அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்து வருகிறார். இவர் சொல்லுங்கண்ணே சொல்லுங்க, குட்டிஸ் சுட்டிஸ் போன்ற சன் தொலைக்காட்சி  நிகழ்ச்சிகளில் பங்களித்து வருகிறார். 
 
2006ல் காதல்' திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இமான் அண்ணாச்சி, 'கோலிசோடா', 'மெட்ராஸ்', 'ஜில்லா', 'பூஜை' உள்பட  ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் இவருடைய தாயார் கமலா இன்று காலை உயிரிழந்துள்ளார். இவரது  இறுதி ஊர்வலம் நாளை அவர்களது சொந்த ஊரான தூத்துக்குடியில் நடைபெற இருக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்