தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டார் ஆன சிரஞ்சீவியின் தம்பிதான் பவன் கல்யாண். சூப்பர் ஹிட் படங்களைக்கொடுத்த நடிகர், தயாரிப்பாளர், திரைக்கதையாசிரியர், இயக்குநர், அரசியல்வாதி என பலமுகங்களைக் கொண்டவர் பவன் கல்யாண். இதுவரை 20 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த அத்துணை படங்களுமே சூப்பட் ஹிட் தான். அந்தளவுக்கு இவருக்கு ஆந்திராவில் ரசிகர்கள் அதிகம்.