எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே எஞ்சுகிறது - கமல் டுவீட்

வெள்ளி, 13 ஆகஸ்ட் 2021 (16:29 IST)
மாற்றத்திற்கான பட்ஜெட்டை எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே எஞ்சுகிறது என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று கடந்த மே மாதம் ஓட்டுகள் எண்ணப்பட்டன. இதில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது.

தற்போது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று சட்டசபையில் ஆளும் கட்சி பட்ஜெட் தாக்கல் செய்தது..

இதுகுறித்து எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர்.

மக்கள் நீதிகட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தனது டுவிட்டர் பகக்த்தில் இந்தப் பட்ஜெட்டை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது: தேர்தல் வாக்குறுதியில் சொல்லப்பட்டவற்றுக்கும், பட்ஜெட்டில் இடம்பெற்றிருப்பவைகளுக்கும் இடையே ஏராளமான வித்தியாசங்கள் உள்ளன. மாற்றத்திற்கான பட்ஜெட்டை எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே எஞ்சுகிறது எனத் தெரிவித்துள்ளார்.

தேர்தல் வாக்குறுதியில் சொல்லப்பட்டவற்றுக்கும், பட்ஜெட்டில் இடம்பெற்றிருப்பவைகளுக்கும் இடையே ஏராளமான வித்தியாசங்கள் உள்ளன. மாற்றத்திற்கான பட்ஜெட்டை எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே எஞ்சுகிறது.

— Kamal Haasan (@ikamalhaasan) August 13, 2021

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்