ரோஹித் தவான் இயக்கத்தில் இரண்டு வாரம் முன்பு டிஸ்யூம் படம் வெளியானது. ஜான் ஆபிரஹாம், வருண் தவான், அக்ஷய் கன்னா என்று பவர் ஸ்டார் காஸ்ட். இருந்தும் 100 கோடி வசூலிக்க திக்கி திணறுகிறது படம்.
இந்த வேடம் பற்றி குறிப்பிட்ட அவர், என் சினிமா கரியரில் டிஸ்யூம் படத்தில் கே யாக நடித்ததை பெருமையாக கருதுகிறேன். என்னுடைய சமகால நடிகர்கள் யாரும் இப்படியொரு கதாபாத்திரத்தில் நடித்ததில்லை என்கிறார்கள். துணிச்சலாக இந்த வேடத்தில் நடிக்க ரசிகர்கள் மீதான நம்பிக்கையே காரணம் என்றார்.