பாலா படத்தில் ரஜினி பட நடிகை!

புதன், 30 மே 2018 (18:48 IST)
காலா படத்தில் ரஜினிக்கு மனைவியாக நடித்த ஈஸ்வரி ராவ், பாலா இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்து வரும் வர்மா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
சந்தீப் வங்கா இயக்கத்தில் கடந்த வருடம் வெளியான தெலுங்குப் படம் ‘அர்ஜுன் ரெட்டி’. விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே இருவரும் ஜோடியாக நடித்திருந்தனர். பிளாக் பஸ்டர் ஹிட்டான இந்தப் படம், பாக்ஸ் ஆபீஸில் வசூல் மழை பொழிந்தது.
 
இந்தப் படத்தை, தமிழில் ‘வர்மா’ என்ற பெயரில் ரீமேக் செய்கிறார் பாலா. விக்ரமின் மகன் த்ருவ் விக்ரம் இந்தப் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார். ‘குக்கூ’ மற்றும் ‘ஜோக்கர்’ படங்களை இயக்கிய ராஜு முருகன், இந்தப் படத்துக்கு வசனம் எழுதியுள்ளார்.
 
இந்தப் படத்தில் காலாவில் ரஜினிக்கு மனைவியாக நடித்த ஈஸ்வரி ராவ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த கதாபாத்திரம் என்ன என்பதை வெளியில் சொல்லாமல் ரகசியம் காத்து வருகிறார் பாலா.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்