காமெடி த்ரில்லராக உருவாகும் இங்கிலீஷ் படம்

செவ்வாய், 13 அக்டோபர் 2015 (12:12 IST)
மசாலா படம் சென்ற வாரம்தான் வெளியானது. இப்போது, இங்கிலீஷ் படம் என்ற பெயரில் ஒரு படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். காமெடி த்ரில்லராக இந்தப் படம் உருவாகிறது.
 

 


சஞ்சய், ராம்கி நடிக்கும் இந்தப் படத்தில் சஞ்சய் நாயகன். ராம்கிக்கு கிட்டத்தட்ட வில்லன் ரோல். அவரது சால்ட் அண்ட் பெப்பர் வைக்கோல்போர் ஹேர்ஸ்டைலைப் பார்க்கையில், இது காமெடிப் படம் என்பது உறுதியாகிறது. இந்த இரு ஆண்களுக்கும் நடுவில் மீனாட்சி.

சஞ்சயின் ஜோ‌டியாக ஸ்ரீஜா தாஸ் என்பவர் நடிக்கிறார். அப்படியானால், மீனாட்சி? சஞ்சய், ராம்கி இடையேயான மோதலுக்கு பாலம் அமைப்பதே மீனாட்சிதானாம்.

குமரேஷ் குமார் இந்தப் படத்தை இயக்கி வருகிறார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்