கோடிகளை விழுங்கும் எந்திரன் 2 பட்ஜெட்

சனி, 14 நவம்பர் 2015 (10:48 IST)
மருதநாயகம் படத்தை ஏன் எடுக்கவில்லை என்று சமீபத்தில் கேட்டதற்கு, 100 கோடி பணம் வேண்டும். நான் சொல்வது நிஜமான 100 கோடி என்று பதிலளித்தார் கமல்.


 
 
இன்று தமிழில் தயாராகும் படங்களின் பட்ஜெட்டும், வசூலும் 100 கோடி 150 கோடி என அடித்து விடப்படுகின்றன. அதனை சுட்டிக்காட்டியே, நிஜமான 100 கோடி என்றார் கமல்.
 
இதில் ஐரணி, தனது விஸ்வரூபம் வெளியான போது, அப்படம் 100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டதாக கமல் கூறினார். 100 கோடியில் விஸ்வரூபத்தை கமலால் எடுக்க முடியும் போது மருதநாயகத்தை அந்த பட்ஜெட்டில் எடுக்க முடியாதா என்ன? உண்மை என்னவென்றால், விஸ்வரூபம் குறித்து கமல் சொன்ன பட்ஜெட், நிஜமான 100 கோடி கிடையாது என்பதே.
 
எந்திரன் 2 படம் குறித்து வரும் செய்திகள் மயக்கத்தை வரவழைக்கின்றன. 260 கோடிகள், 300 கோடிகள் என்று இஷ்டத்துக்கு எழுதுகிறார்கள். இந்த பட்ஜெட்டுக்கு பணத்தை பம்புசெட் வைத்துதான் இறைக்க வேண்டும்.
 
அதேபோல், இரண்டே நாளில் எண்பது கோடி வசூல் என்று சொல்லப்படும் படங்களின் தயாரிப்பாளர்கள் படம் ஓடி முடிந்ததும், போட்ட பணம் எல்லாம் காலி என்று தலையில் துண்டுடன் தெருவில் நின்று புலம்புகிறார்கள்.
 
கோடிக்கு இப்போதும் மதிப்பு இருக்கு மகாஜனங்களே. கொஞ்சம் அளவாகவே சொல்லுங்க.

வெப்துனியாவைப் படிக்கவும்