ஜனவரியில் வரும் எனக்குள் ஒருவன் - சென்சார் யு சான்றிதழ்

புதன், 19 நவம்பர் 2014 (10:05 IST)
கன்னடத்தில் வெளியாகி நல்ல மாற்று சினிமா முயற்சி என பாராட்டப்பட்ட லூசியா படத்தை சி.வி.குமாரின் திருக்குமரன் என்டர்டெய்ன்மெண்ட் எனக்குள் ஒருவன் என்ற பெயரில் தயாரித்து வருகிறது.
சித்தார்த், தீபா சன்னதி நடிக்கும் இந்தப் படத்தை பிரசாத் ராமர் என்பவர் இயக்கியுள்ளார். இசை சந்தோஷ் நாராயணன். 
 
படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷனும் முடிந்த நிலையில் படத்தை சென்சாருக்கு திரையிட்டு காட்டினர். படத்தைப் பார்த்தவர்கள் யு சான்றிதழ் அளித்தனர்.
 
ஜனவரியில் படம் திரைக்கு வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்