பெண்களோட உணர்ச்சிகள, ஆசைகள சொல்ற படம்! ஓவியா 90எம்எல் இயக்குனர் பேட்டி

சனி, 9 பிப்ரவரி 2019 (06:49 IST)
பிக்பாஸ் ஓவியா ஹீரோயினாக நடித்துள்ள 90எம்எல்  திரைப்படத்துக்கு 'ஏ' கிடைத்துள்ளது.



இதனால் அவரது ரசிகர்கள் அப்படி இந்த பட இருக்கிறது என அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் '90 ml'  பட இயக்குனர் அனிதா உதீப் பிரபல தமிழ் வார இதழுக்கு அளித்த பேட்டியில், என்னோட '90எம்எல் ' திரைப்படம் கண்டிப்பா எல்லோருக்கும் பிடிக்கும்'. 
 
இந்தப் படம் ,பெண்களுக்கு இருக்கிற ஆசைகள், உணர்ச்சிகளை எந்த சமரசமும் இல்லாம சொல்லும். பெண்களை உத்தமியா மட்டும் பார்க்காதீங்க. அவங்களுக்குள்ளே இருக்கிற கனவுகளையும் பாருங்கன்னு என்னோட படத்தின் மூலமா சொல்லியிருக்கேன். 
 
இந்தப் படத்தோட கதையை நான் எழுதும்போதே, இதுக்கு 'ஏ' சான்றிதழ் கிடைக்கும்னு எனக்குத் தெரியும். ஏன்னா, இது அப்படிப்பட்ட கதைதான். படத்துல தப்பான விஷயம் எதுவும் சொல்லலை. ஆனா, பெண்களோட ஆசைகள் பற்றி சொல்றப்போ, சில விஷயங்களை நாம சொல்லவேண்டியிருக்கு. அதுக்காகத்தான் இந்தச் சான்றிதழ்  கொடுத்திருக்காங்க. படத்துக்கு 'ஏ' சான்றிதழ் கொடுத்தது எனக்கு எந்த விதத்திலும் கவலையில்லை'' என்று கூறியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்