புதிய படங்களை வாங்கி குவிக்கும் ஜீதமிழ்:

புதன், 23 ஆகஸ்ட் 2017 (05:54 IST)
கடந்த சில ஆண்டுகளாக திரைப்படங்களின் சாட்டிலைட் உரிமைகளை வாங்க ஆர்வம் காட்டாத தனியார் தொலைக்காட்சிகள் இந்த ஆண்டு போட்டி போட்டு படங்களை வாங்கி குவிக்கின்றது. குறிப்பாக ஜிதமிழ் இதில் முன்னணியில் உள்ளது.



 
 
2017ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன படங்களில் 16 திரைப்படங்களின் சாட்டிலைட் உரிமைகளை பெற்றுள்ள இந்த டிவி, தற்போது தயாராகி வரும் ரஜினியின் '2.0 உள்பட பல திரைப்படங்களின் சாட்டிலைட் உரிமைகளை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
 
இதுவரை ஜீதமிழ் தொலைக்காட்சி  ‘அதே கண்கள்’, எனக்கு வாய்த்த அடிமைகள்’, ‘எமன்’, ‘டோரா’, ‘கவண்’, ‘சிவலிங்கா’, ‘8 தோட்டாக்கள்’, ‘மரகத நாணயம்’, ‘வனமகன்’, ‘இவன் தந்திரன்’, ‘நிபுணன்’, ‘பொதுவாக என்மனசு தங்கம்’, ‘புரியாத புதிர்’, ‘இடம் பொருள் ஏவல்’, ‘சர்வர் சுந்தரம்’, ‘ஸ்பைடர்’ போன்ற திரைப்படங்களை வாங்கி குவித்துள்ளதாகவும், இன்னும் சில முன்னணி திரைப்படங்களின் உரிமைகளுக்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்