துல்கர் சல்மானின் கிங் ஆஃப் கோதா டிரைலர் ரிலீஸ்!

வெள்ளி, 11 ஆகஸ்ட் 2023 (07:46 IST)
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழி திரைப்படங்களில் நடித்து பரீட்சியமான நடிகராக வலம் வருபவர் துல்கர் சல்மான். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் உருவான சீதாராமம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தெலுங்கில் உருவான இந்த திரைப்படம் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் வெற்றி பெற்றது.

இதையடுத்து துல்கர் சல்மானின் அடுத்தடுத்த படங்கள் மீது எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அந்த வகையில் அவர் நடிப்பில் இப்போது உருவாகியுள்ள கிங் ஆஃப் கோதா படத்தின் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்த படத்தை அபிலாஷ் ஜோஷி இயக்க, ஐஸ்வர்யா லெஷ்மி, செம்பன் வினோத் ஜோஸ், பிரசன்னா, அனிகா சுரேந்தர், கோகுல் சுரேஷ், ஷம்மி திலகன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜேக்ஸ் பிஜோய், ஷான் ரஹ்மான் ஆகிய இருவரும் படத்துக்கு இசையமைத்துள்ளனர். இந்நிலையில் நேற்று இந்த படத்தின் டிரைலர் ஐந்து மொழிகளில் ரிலீஸ் ஆகி கவனம் ஈர்த்துள்ளது.  ஆக்‌ஷன் காட்சிகளோடு கேங்ஸ்டர் படமாக இந்த திரைப்படம் உருவாகியுள்ளதை டிரைலர் காட்டுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்