’’போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கு’’...பிரபல நடிகருக்கு மீண்டும் சம்மன்!!
செவ்வாய், 15 டிசம்பர் 2020 (16:52 IST)
சமீபத்தில் நடிகர் சுஷாந்த் சிங் தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் இந்தியாவையே உலுக்கி எடுத்துள்ளது. தற்போது இவரது காதலின் ரியா போதைப்பொருள் தடுப்பு துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்தில் உள்ளார்.
இதையடுத்து சாரா அலிகான், தீபிகா படுகோனே ஆகியொருக்கு போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் நோட்டீஸ் அனுப்பினர்.
இந்நிலையில், பிரபல பாலிவுட் நடிகர் அர்ஜூன் ராம்பாலின் காதலி கெபரில்லாவின் சகோதரன் அஜிசியாலோஸிடம் தடை செய்யப்பட்ட போதைப்பொருள் வைத்திருந்ததாக அவர் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து, அர்ஜூன் ராம்பாலின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. பின்னர், வரும் நவம்பர் 13 அம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி அர்ஜூன் ராம்பாலுக்கு போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர்.
இந்நிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு பாலிவுட் நடிகர் அர்ஜூன் ராம்பாலுக்கு போதைத்தடுப்புப் பிரிவினர் சம்மன் அனுப்பி உள்ளனர்.