சினிமாவை விமர்சிக்கும் மருத்துவர் ராமதாஸே பாராட்டிய தமிழ்ப் படம்

புதன், 17 ஆகஸ்ட் 2016 (14:12 IST)
சினிமாதான் தமிழகத்தின் சீரழிவுக்கு முக்கிய காரணம் என்று மேடைக்கு மேடை விமர்சிக்கும் மருத்துவர் ராமதாஸே ஒரு தமிழ்ப் படத்தைப் பார்த்து பாராட்டியுள்ளார். அது, சீனு ராமசாமி இயக்கியிருக்கும் தர்மதுரை.


 
 
விஜய் சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிருஷ்டி டாங்கே நடிப்பில் சீனு ராமசாமி மதுரை பின்புலத்தில் தர்மதுரையை இயக்கியுள்ளார். வரும் 19 -ஆம் தேதி படம் திரைக்கு வருகிறது.
 
இந்தப் படத்தை பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி ஆகியோருக்கு திரையிட்டு காட்டினர். படத்தைப் பார்த்தவர்கள், நல்ல படம் என்று இயக்குனரையும் படம் சம்பந்தப்பட்டவர்களையும் பாராட்டியிருக்கிறார்கள். 
 
இந்தத் திரையிடலின் போது சீனு ராமசாமி, விஜய் சேதுபதி, படத்தின் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் மூவரும் உடனிருந்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்