கமலா திரையரங்கில் கககபோ படத்தின் இசை வெளியீட்டு விழாவில், திரைப்பட தயாரிப்பாளரும், திமுக எம்எல்ஏவுமான ஜெ.அன்பழகன் பேசுகையில், தலைவா படத்தைத் தடுத்ததே ஜெயலலிதா தலைமையிலான அரசுதான் என்று குற்றம் சாட்டினார்.
முதல்வர் ஜெயலலிதாவுக்கும் இந்தப் பட பிரச்சினைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நடிகர் விஜய் ஏற்கனவே விளக்கம் கொடுத்துவிட்ட நிலையில், ஜெ.அன்பழகன் எதை மனதில் வைத்து இப்படி சொல்கிறார் என தெரியவில்லை.