பாலா படத்துக்கு வசனம் எழுதும் முன்னணி இயக்குனர்!

சனி, 18 செப்டம்பர் 2021 (16:18 IST)
இயக்குனர் பாலா இயக்கும் படத்துக்கு இயக்குனரும் வசனகர்த்தாவுமான விஜி வசனம் எழுத உள்ளாராம்.

இயக்குனர் பாலாதான் தமிழ் சினிமாவில் சூர்யாவுக்கு என்று நந்தா படத்தின் மூலமாக ஒரு அடையாளத்தைக் கொடுத்தார். அதன் பின்னர் அவர் இயக்கிய பிதாமகன் படத்திலும் சூர்யாவுக்கு ஒரு முக்கியமான வேடத்தைக் கொடுத்து அவரிடம் இருந்த நகைச்சுவை நடிப்பையும் வெளிக்கொண்டு வந்தார். இதனால் சூர்யா தனது சினிமா காட்பாதராக பாலாவை நினைத்து வந்தார்.

இப்போது பாலாவுக்கு சினிமாவில் போதாத காலம் என்பதால் அவருடைய இயக்கத்தில் நடிக்க சம்மதித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் அந்த படத்தை தயாரிக்கவும் உள்ளாராம். இந்த படத்துக்கான வேலைகள் இப்போது பிஸியாக நடந்துகொண்டிருக்கும் நிலையில் படத்துக்கான வசனத்தை எழுதும் பொறுப்பை இயக்குனர் விஜி பெற்றுள்ளாராம்.

இவர் அள்ளித்தந்த வானம் மற்றும் வெள்ளித்திரை ஆகிய படங்களை இயக்கியவர். மேலும் இயக்குனர் ராதாமோகனின் மொழி, மற்றும் காற்றின் மொழி ஆகிய படங்களுக்கு வசனம் எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்