கணவர் மற்றும் அவர் குடும்பத்தினர் விருப்பத்தை மீறி, அமலாபால் படங்களில் நடிப்பது. விஜய், அமலாபால் ஆகிய இருவருக்கும் இடையே கருத்து வேறுபாட்டை ஏற்படுத்திதாகவும், இதனால் இருவரும் விவாகரத்து செய்துக்கொள்ள முடிவு செய்திருப்பதாகவும் செய்திகள் வெளியானது.
ஆனால், திருமணத்திற்கு பிறகு அமலாபால் நடிப்பதில் எந்த் பிரச்சனையும் இல்லை. ஆனால், திருமண வாழ்வுக்கு முக்கியமான நம்பிக்கை, நேர்மை ஆகிய இரண்டும் உடைந்துவிட்டதால் அமலாபாலை விவாகரத்து செய்வதாக விஜய் சமீபத்தில் விளக்கமளித்தார்.
இந்நிலையில், விஜய், அமலாபால் ஆகிய இருவரும் சென்னை முதன்மை குடும்ப நல நீதிமன்றத்தில் இன்று விவாகரத்து கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார்கள்.