சினிமாவில் 20 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ள சுசீந்திரன்… நன்றி தெரிவித்து பதிவு!

வெள்ளி, 31 மார்ச் 2023 (15:54 IST)
வெண்ணிலா கபடி குழு திரைப்படம் மூலமாக அறிமுகமான சுசீந்திரன் அடுத்தடுத்து நான் மகான் அல்ல, ஜீவா மற்றும் பாண்டிய நாடு உள்ளிட்ட ஹிட் படங்களைக் கொடுத்தார். ஆனால் அதன் பின்னர் அவர் இயக்கிய படங்கள் தோல்விப் படங்களாக அமைந்தன. இப்போது  சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகும் வள்ளிமயில் படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தில் சத்யராஜ் மற்றும் பாரதிராஜா உள்ளிட்டோரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். 1980 கால கட்டங்களில் நடக்கும் கதையாக பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டு, மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கப் பட்டு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாக இருக்கிறது. விஜய் ஆண்டனி விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வருவதால் வள்ளிமயில் ஷூட் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் சுசீந்திரன் சினிமாவுக்கு அறிமுகமாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். 2003 ஆம் ஆண்டு உதவி இயக்குனராக அறிமுகமான அவர் தற்போது வள்ளிமயில் படத்தை இயக்கி வருகிறார். 20 வருடங்களை நிறைவு செய்துள்ளது குறித்து “சினிமாதான் எனக்கு எல்லாமே தந்தது. அனைவருக்கும் எனது நன்றி” எனக் கூறியுள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்