“காவிரி பிரச்னைக்கும், ‘பாகுபலி’க்கும் சம்பந்தம் இல்லை” - இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி

Webdunia
திங்கள், 17 ஏப்ரல் 2017 (11:26 IST)
“காவிரி பிரச்னைக்கும், ‘பாகுபலி’ படத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி.
 

 

கடந்த 9 வருடங்களுக்கு முன்பு, காவிரி பிரச்னைக்காக கர்நாடகத்தை எதிர்த்துப் பேசினார் நடிகர் சத்யராஜ். எனவே, ‘சத்யராஜ் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லையென்றால், ‘பாகுபலி-2’ படத்தை கர்நாடகத் திரையரங்குகளில் ரிலீஸ் செய்யவிட மாட்டோம்’ என வாட்டாள் நாகராஜ் தலைமையிலான குழு போராட்டம் நடத்தி வருகிறது.

இந்நிலையில், “படத்தை எதற்காக கன்னடர்கள் எதிர்க்கிறார்கள் என்றே தெரியவில்லை. ‘பாகுபலி’ முதல் பாகம் முதற்கொண்டு பல படங்கள் கடந்த 9 வருடங்களில் ரிலீஸ் ஆகியுள்ளன. அப்போதெல்லாம் கிளம்பாத எதிர்ப்பு, இப்போது எப்படிக் கிளம்பியதெனத் தெரியவில்லை. காவிரி பிரச்னை, சென்சிட்டிவ்வான பிரச்னை. அதற்கும், ‘பாகுபலி’ படத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சத்யராஜ் இந்தப் படத்தின் இயக்குநரோ, தயாரிப்பாளரோ கிடையாது என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார் ராஜமெளலி.

படத்தின் தயாரிப்பாளரான ஷிபோ, “இந்தப் படத்தை கர்நாடகாவில் திரையிடாததால், நடிகரான சத்யராஜுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், தயாரிப்பாளருக்குத்தான் நஷ்டம்” என்று கூறியுள்ளார்.

பிரபாஸ், அனுஷ்கா, ராணா டகுபதி, தமன்னா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ள இந்தப் படம், வருகிற 28ஆம் தேதி இந்தியா முழுவதும் பல்வேறு மொழிகளில் ரிலீஸ் ஆகிறது.
 
அடுத்த கட்டுரையில்