செந்தூரப்பூவே இயக்குனர் பி.ஆர்.தேவராஜ் விபத்தில் மரணம்

செவ்வாய், 24 மே 2016 (12:31 IST)
விஜயகாந்த், ராம்கி நடித்திருந்த செந்தூரப்பூவே திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் பி.ஆர்.தேவராஜ் விபத்தில் மரணமடைந்தது திரையுலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
 

 
1988-ஆம் ஆண்டு விஜயகாந்த், ராம்கி, நிரோஷா நடிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற படம் ‘செந்தூரப்பூவே’. இப்படத்தை இயக்கியவர் பி.ஆர்.தேவராஜ் [வயது 62].
 
வெள்ளி விழா கொண்டாடியது இந்த திரைப்படம். மனோஜ்-கியான் இசையமைத்த இந்த படத்தின் பாடல்கள், வெகுஜன மக்களை வெகுவாக கவர்ந்து. ’கிளியே.. இளங்கிளியே..’, ’சோதனை தீரவில்லை’, ‘செந்தூர பூவே இங்கு தேன் சிந்தவா’, ’ஆத்துக்குள்ளே ஏலோலே’ என அத்தானை பாடல்களும் ஹிட் ஆயின.
 
அதன் பிறகு தேவராஜ் 'இளையராகம்' என்ற படத்தை இயக்கினார். அது தோல்வி அடையவே சினிமாவிலிருந்து விலகி தெலுங்கு தொலைக்காட்சி தொடர்களை இயக்கி வந்தார். 
 
இந்நிலையில், நேற்று முன்தினம் நண்பர்களுடன் கோவையில் இருந்து ஹைதராபாத்துக்கு காரில் சென்றார். கர்னூல் அருகே கார் விபத்துக்குள்ளானதில் தேவராஜ் பலியாகியுள்ளார். பி.ஆர்.தேவராஜின் மறைவுக்கு பல்வேறு திரையுலகினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
 
அவரது உடல் இன்று 23.05.2016 சென்னை கொண்டு வரப்பட்டு, இறுதி அஞ்சலி இன்று மாலை 3.30 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெறும் என்று தமிழ்நாடு திரைப்பட இயக்குநா்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்