தங்கலான் எப்போது ரிலீஸ்… இயக்குனர் பா ரஞ்சித் கொடுத்த அப்டேட்!

சனி, 8 ஏப்ரல் 2023 (08:30 IST)
இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவரும் 'தங்கலான்’ என்ற திரைப்படத்தில் விக்ரம் மற்றும் மாளவிகா மோகனன் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் கதைக்களம் கோலார் தங்க வயலை மையப்படுத்தி உருவாக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் ஷுட்டிங் மதுரை மற்றும் ஆந்திராவின் சில பகுதிகளில் முதலில் நடந்தது. இப்போது கோலார் தங்கவயலில் ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகரான டேனியல் கால்டகிரன் நடிப்பதை படத் தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் அறிவித்துள்ளது. இது சம்மந்தமான அறிவிப்பு போஸ்டரை வெளியிட இணையத்தில் கவனம் பெற்றது.

இந்த படம் பற்றி பேசியுள்ள தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா “தங்கலான் தமிழ் படமோ இந்திய படமோ அல்ல. உலகப்படம். மிகச்சிறப்பாக உருவாகி வருகிறது. எத்தனை மொழிகளில் முடியுமோ அத்தனை மொழிகளில் இந்த படத்தை டப் செய்ய உள்ளோம்” எனக் கூறியுள்ளார்.

இப்போது 80 சதவீதம் ஷூட்டிங்கை முடித்துள்ள இயக்குனர் பா ரஞ்சித் படத்தின் ரிலீஸ் பற்றி பேசியுள்ளார். அதில் “இன்னும் 25 நாட்கள் ஷூட்டிங் நடக்க வேண்டி உள்ளது. வி எப் எக்ஸ் காட்சிகள் அதிகமாக உள்ளதால் இந்த ஆண்டு இறுதியில் படம் ரிலீஸ் ஆகும்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்