இந்நிலையில் தனது அடுத்தப்படமான பத்து தல படத்தில் பிஸியாகியுள்ளார் சிம்பு. சிம்பு, கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் இந்த படத்தை கிருஷ்ணா இயக்குகிறார். முதன்முறையாக கௌதம் கார்த்திக், சிம்பு இணையும் படம் என்பதால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று மாலை இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் வெளியாகியுள்ளது. அந்த போஸ்டருக்கு இணையத்தில் வரவேற்புக் கிடைத்துள்ளது.
இந்த படத்துக்கு இசையமைக்க ரஹ்மான் ஒப்புக்கொண்டது எப்படி என இயக்குனர் கிருஷ்ணா தெரிவித்துள்ளார். அதில் ஜில்லுனு ஒரு காதல் படத்தைப் போலவே பத்து தல படத்திற்கும் இசை அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. அமைதி தான் படத்தின் ஒரு அங்கமாக இருக்கிறது. அதனால் அவரிடம் இந்த கதையை தயங்கிக் கொண்டேதான் சொன்னேன். ஆனால் அவர் உடனடியாக இசையமைக்க சம்மதித்தார். விரைவில் அந்தப் படத்தின் இசைப்பணிகளில் ஈடுபட உள்ளோம். எனக் கூறியுள்ளார்.