இயக்குனர் பாலாஜி சக்திவேல் தாயார் காலமானார்

திங்கள், 30 நவம்பர் 2015 (16:37 IST)
தமிழ் திரைப்பட இயக்குனர் பாலாஜி சக்திவேல் தாயார் சரஸ்வதி அம்மாள் நேற்றிரவு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் இயற்கை காலமானர். அவருக்கு வயது 74.


 
 
சமுதாயத்தில் நடக்கும் சில நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு திரைப்படம் இயக்கும் வல்லமை கொண்டவர் பாலாஜி சக்திவேல். சாமுராய், காதல், கல்லூரி, வழக்கு எண் உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய உள்ளார். இவர் குடும்பத்துடன் சென்னை ராமாபுரத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரது வீட்டில் தாயார் சரஸ்வதி அம்மாள் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் நேற்று காலமானார்.
இயக்குனர் அமீர், விக்ரமன் மற்றும் பல நடிகர்கள் பாலாஜி சக்திவேலின் தாயாருக்கு அஞ்சலி செலுத்தினர். 
 
போருரில் உள்ள மின் மயானத்தில் அம்மையாரது இறுதி சடங்குகள் நடைபெற்றது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்