ஒரு வழியாக பாலாவுக்குக் கிடைத்தார் ஹீரோ – வொர்க் அவுட் ஆகுமா காம்பினேஷன்!

வியாழன், 23 ஜூலை 2020 (11:40 IST)
இயக்குனர் பாலா இயக்கும் அடுத்த படத்தில் கதாநாயகனாக நடிகர் விஜய் ஆண்டனி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒரு காலத்தில் பாலா தன் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்திலாவது நடிக்க அழைக்க மாட்டாரா என நடிகர்கள் ஏங்கினர். அந்த அளவுக்கு அவர் படங்களில் நடிகர்களை சிறப்பாக கையாண்டு ரசிகர்கள் மத்தியில் இடம்பிடிக்க வைப்பார். விக்ரம், சூர்யா, சங்கீதா, ஆர்யா மற்றும் அதர்வா போன்ற நடிகர்களை ஸ்டாராக்கியதே பாலாவின் படங்கள்தான்.

ஆனால் இப்போது நிலைமை வேறு கடைசியாக அவர் இயக்கிய படங்கள் எதுவும் சரியாக போகவில்லை. வணிக ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் தோல்வி அடைந்தன. அதனால் அவர் தூக்கிவிட்ட ஹீரோக்களே கூட அவருக்கு கால்ஷீட் கொடுக்காமல் ஓடி ஒளிந்தனர். இந்நிலையில் இப்போது இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி பாலா இயக்கத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்