சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ படத்தில் இணைந்த விஜய் ஆண்டனி இயக்குனர்!

வியாழன், 8 செப்டம்பர் 2022 (19:00 IST)
சிவகார்த்திகேயன் நடித்த பிரின்ஸ் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது டப்பிங் உள்பட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
 
இந்த நிலையில் சிவகார்த்திகேயன் பிரின்ஸ் திரைப்படத்தில் விஜய் ஆண்டனி பட இயக்குனருக்கு இணைந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான காமெடி திரைப்படம் இந்தியா-பாகிஸ்தான் என்பதும் இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் இந்த படத்தை இயக்கிய ஆனந்த் என்பவர் பிரின்ஸ் படத்தின் தமிழ் வசனங்களை எழுதி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரின்ஸ் இயக்குனர் அனுதீப் இந்த படத்தின் தெலுங்கு வசனங்களை எழுதி உள்ள நிலையில் தமிழ் வசனங்களை ஆனந்த் எழுதுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
சிவகார்த்திகேயன், மரியா, சத்யராஜ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார் என்பதும் இந்த படம் வரும் தீபாவளி அன்று வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்