டீக்கடை ராஜாவாகும் தனுஷ்...?

வெள்ளி, 3 ஏப்ரல் 2015 (12:52 IST)
மாரி படத்தை முடித்த தனுஷ் வேல்ராஜ் இயக்கத்தில் எமி ஜாக்சனுடன் நடித்து வருகிறார். வேலையில்லா பட்டதாரி டீம் அப்படியே பணிபுரியும் படம் இது. தனுஷின் வுண்டார்பார் தயாரிப்பு.
 
இந்தப் படத்தின் பெயர், டீக்கடை ராஜா என்று தகவல். வேலையில்லா பட்டதாரி படத்தில் வரும் பாடலின் ஒருவரி, டீக்கடை ராஜா நாங்க என்று இருக்கும். அதிலிருந்து எடுத்த பெயர் என உபரி தகவல். தகவல், உபரி தகவல் இரண்டும் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
 
ஒருவேளை இந்த இரண்டும் உண்மையாக இருந்தால், தனுஷின் கவனத்துக்கு. டீக்கடையில் உள்ள டீ ஆங்கில வார்த்தை. கண்டிப்பாக 30 சதவீத வரிச்சலுகை கிடைக்காது. ஒரு நடிகராக வரிச்சலுகைப் பற்றி கவலைப்படாவிட்டாலும், ஒரு தயாரிப்பாளராக கவலை கொண்டே ஆக வேண்டும்.
 
கடைசி நேரத்தில் டீக்கடையை மாற்றுவதற்குப் பதில் இப்போதே தமிழ்ப் பெயராக வைப்பது நல்லது.

வெப்துனியாவைப் படிக்கவும்