மே 20 டீஸராக வெளிவரும் மாரி

திங்கள், 18 மே 2015 (16:14 IST)
பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், காஜல் அகர்வால் நடித்துள்ள மாரி படத்தின் டீஸர் வரும் 20 -ஆம் தேதி வெளியாகிறது.
வாய் மூடி பேசவும் படத்துக்குப் பிறகு தனுஷை வைத்து, மாரி படத்தை பாலாஜி மோகன் இயக்கி வருகிறார். தனுஷ் டெய்லராகவும், காஜல் அகர்வால் நூல் விற்பவராகவும் இதில் நடிப்பதாக கேள்வி. விஜய் யேசுதாஸ் முக்கியமான வேடத்தில்.
 
தனுஷின் வுண்டர்பாரும், ராதிகாவின் மேஜிக் ப்ரேம்ஸும் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தின் பாடல்கள் 25 வெளியாகவிருக்கும் நிலையில், அதற்கு முன்பாக 20 -ஆம் தேதி டீஸரை வெளியிடுகின்றனர்.
 
அனிருத் மாரிக்கு இசையமைத்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்