100 நாள்களை கடந்த வேலையில்லா பட்டதாரி

சனி, 25 அக்டோபர் 2014 (12:43 IST)
இன்று ஒரு படம் இரண்டு வாரங்கள் தாக்குப் பிடிப்பதே சிரமம். 100 நாள்கள் எல்லாம் அபூர்வம். தனுஷின் வேலையில்லா பட்டதாரி 100 நாள்களை கடந்திருப்பது ஒரு சாதனை என்றே சொல்ல வேண்டும்.
அடுத்தடுத்த தோல்விகளால் தனுஷின் மார்க்கெட் சின்னா பின்னமான நிலையில் வெளிவந்தது வேலையில்லா பட்டதாரி. சிவ கார்த்திகேயன் படத்தின் வசூலில் பாதியாவது வசூலிக்குமா என்றெல்லாம் கிண்டலடிக்கப்பட்ட நிலையில் படம் விஸ்வரூப வெற்றி பெற்றது. இத்தனைக்கும் கடுகளவுதான் கதை இருந்தது படத்தில்.
 
ரசிகர்களால் க்ளீன் என்டர்டெய்ன்மெண்ட் என முத்திரை குத்தப்பட்ட வேலையில்லா பட்டதாரி இந்த வருடம் வெளியான படங்களில் அதிகம் லாபம் சம்பாதித்த படம் என்று கூறப்படுகிறது (கத்தி அதனை முந்துமா என்பது பிறகுதான் தெரியும்). வேலையில்லா பட்டதாரியின் தயாரிப்பு தனுஷ் என்பதால் அவரது சம்பளம் தவிர்த்து படத்தின் பட்ஜெட் வெறும் ஐந்து கோடிகள்தான்.
 
படம் வெற்றி பெற்றதால் இதே டீம் இணைந்து இன்னொரு படம் தயாரிக்கயிருப்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்