தங்க மகனானது தனுஷின் விஐபி 2

திங்கள், 12 அக்டோபர் 2015 (09:34 IST)
வேலையில்லா பட்டதாரி படத்தை உருவாக்கிய அதே டீம் இணைந்து தனுஷ், சமந்தா, ஏமி ஜாக்சன் நடிப்பில் புதிய படம் ஒன்றை எடுத்து வந்தது. 


 

 
வேலையில்லா பட்டதாரி டீமின் இரண்டாவது படம் என்பதால் இந்தப் படத்தை, விஐபி 2 என்றே அழைத்து வந்தனர்.
 
ஆனால், வேலையில்லா பட்டதாரிக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்நிலையில், இப்படத்துக்கு தங்க மகன் என்று ரஜினிபட பெயரை வைத்துள்ளனர்.
 
தங்க மகன் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. வேல்ராஜ் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் கே.எஸ்.ரவிக்குமார், ராதிகா ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்