காலியான மூளையுடன்தான் படப்பிடிப்புக்கு செல்வேன்

திங்கள், 26 ஜனவரி 2015 (14:41 IST)
ஃபெப்ரவரியில் தனுஷின் இரண்டாவது இந்திப் படம், ஷமிதாப் திரைக்கு வருகிறது. அமிதாப், அக்ஷரா நடித்துள்ள இப்படத்தின் அறிமுகவிழா சத்யபாமா பல்கலைக்கழத்தில் நடந்தது.
அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அமிதாப்பச்சன் ஆப்சென்ட். இயக்குனர் பால்கி, தனுஷ், அக்ஷரா விழாவில் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய தனுஷ்,
 
"நல்ல கதைக்காக பல மாதங்கள் காத்திருந்தேன். பால்கி சார் சொன்ன கதை பிடித்திருந்தது. அமிதாப் சாருடன் நடிப்பது பெருமை. முதலில் அவர் நல்ல மனிதர். அவருடன் நடிக்கும் போது கற்றுக் கொள்ள வேண்டும் என்று தான் நடிக்கவே ஆசைப்பட்டேன். நிறைய கற்றுக் கொண்டேன். அவர் ஒரு ஜாம்பவான். 
 
இந்தப் படத்தில் என்ன ஹோம் ஒர்க் செய்தீர்கள். என்ன கஷ்டங்களைச் சந்தித்தீர்கள் என்றெல்லாம் கேட்கிறார்கள். வீட்டில் சிந்தித்து நடிக்கிற அளவுக்கு ஹோம் ஒர்க் செய்கிற அளவுக்கு எனக்கு அறிவு கிடையாது. காலியான மூளையுடன்தான் படப்பிடிப்புக்குச் செல்வேன். அதில் வேண்டியதை இயக்குநர் நிரப்புவார். நான் வெளிப்படுத்துவேன். இதுதான் நடந்தது. இந்தப் படத்தில் நான் நடிக்கும் போது உடன் நடித்த யாரும் என்னை சிரமப்படுத்தவில்லை" என்றார்.
 
ஷமிதாப்புக்கு இளையராஜா இசையமைக்க, பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்