நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என்று பல அவதாரங்களை எடுத்த தனுஷின் முதல் இயக்குனர் அவதாரம், பவர் பாண்டி. ராஜ்கிரண் நடித்துவரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய நிறைவடையும் நிலையில் உள்ளது. இந்நிலையில், பவர் பாண்டியின் வெளியீட்டு தேதியை தனுஷ் அறிவித்துள்ளார்.