தனுஷின் ’பண்டாரத்தி புராணம் ‘பாடல் ரிலீஸ்... இணையதளத்தில் வைரல்

செவ்வாய், 2 மார்ச் 2021 (17:22 IST)
தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கர்ணன் படத்தின் 2 வது சிங்கில்  பாடல் குறித்து இப்படத்தின் தயாரிப்பாளர் தாணு நேற்று அறிவித்தபடி தற்போது இப்பாடல் ரிலீசாகி வைரலாகி வருகிறது. 
 
தனுஷ் நடித்த ’கர்ணன்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் கண்டா வரச்சொல்லுங்க என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி உலகம் முழுவதும் ஹிட்டானது என்பது தெரிந்ததே. மாரியம்மாள் என்ற கிராம பாடகி இந்த பாடலை பாடியதன் மூலம் மிகப்பெரிய அளவில் புகழ் பெற்றிருக்கிறார்.
 
இந்த நிலையில் ’கர்ணன்’ படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தெரிவித்ததுபோல் இன்று 5 மணிக்கு’ பண்டாரத்தி புராணம்’ பாடல் திங்மியூசிக்கின் யூடியுப் பக்கத்தில் வெளியாகியுள்ளது. இப்பாடலை பதினைந்து நிமிடத்தில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். ஆயிரக்கணக்கான லைக்குகள் குவிந்து வருகிறது. இப்பாடல் முதல் பாடலைப் போலவே சாதனை படைக்கும் எனக் கூறப்படுகிறது. இப்பாடலை தேனிசைத் தென்றல் தேவா பாடியுள்ளார்.
 
பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ள இப்பாடல் குறித்து ரசிகர்கள்  டுவிட்டரில் ஹேஸ்டேக் உருவாக்கி டிரெண்டிங் செய்து வருகின்றனர். இப்படம் வரும் ஏப்ரல்
9 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்