ஆரஞ்சு மிட்டாய் ட்ரெய்லர் - விஜய் சேதுபதியை நினைத்து பெருமைப்படும் தனுஷ்

வெள்ளி, 28 நவம்பர் 2014 (10:30 IST)
விஜய் சேதுபதி தயாரித்து நடித்திருக்கும் ஆரஞ்சு மிட்டாய் படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டிருக்கிறார்கள். படத்தின் வசனமும் அவரே.
நரைத்த தலைமுடி, மீசையுடன் வயதான கெட்டப்பில் வருகிறார் விஜய் சேதுபதி. முற்றிலும் வித்தியாசமான முறையில் ட்ரெய்லரை வடிவமைத்திருக்கிறார்கள். பார்த்தவர்கள் பாராட்டி வருகின்றனர்.
 
இந்நிலையில் ஆரஞ்சு மிட்டாய் ட்ரெய்லரை பாராட்டியுள்ள தனுஷ், விஜய் சேதுபதியை நினைத்து பெருமைப்படுவதாகவும், வித்தியாசத்தை விரும்பும் மனிதன் எனவும் பாராட்டியுள்ளார்.
 
தனுஷ் தயாரிப்பில் நானும் ரவுடிதான் படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடிக்கயிருப்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்