என்னை நோக்கி பாயும் தோட்டா... பர்ஸ்ட் லுக் தேதி அறிவிப்பு

திங்கள், 21 நவம்பர் 2016 (11:36 IST)
கௌதம் இயக்கத்தில் தனுஷ், ராணா நடித்துவரும், என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

 

அச்சம் என்பது மடமையடா வெளியான நிலையில், என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் முழுக்கவனத்தையும் செலுத்தி வருகிறார் கௌதம். இந்தப் படத்தில் இடம்பெறும் பாடல்களை, பாடல்கள் கம்போஸ் செய்யாமலே படமாக்கியுள்ளார். யார் இசையமைப்பாளர் என்பதையும் சஸ்பென்சாக வைத்துள்ளனர்.

இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக்கை நவம்பர் 27 வெளியிட இருப்பதாக கௌதம் அறிவித்துள்ளார். அவரது ஒன்றhக என்டர்டெய்ன்மெண்ட் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்