வெளிநாடுகளில் வசூலில் கலக்கும் வேலையில்லா பட்டதாரி

செவ்வாய், 29 ஜூலை 2014 (21:42 IST)
தனுஷின் தளர்ந்து போன மார்க்கெட்டை மீண்டும் ஸ்டெடியாக்கியிருக்கிறது வேலையில்லா பட்டதாரி. தமிழகத்தைப் போலவே வெளிமாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் படம் வசூலில் பட்டையை கிளப்புகிறது. தனுஷ் நடிப்பில் இதுவரை வெளியான படங்களில் வேலையில்லா பட்டதாரியே வெளிநாடுகளில் அதிகம் வசூலித்துள்ளது.
யுஎஸ்ஸில் இரண்டாவது வார இறுதியில் 21 திரையிடல்களில் 29,049 டாலர்களை வசூலித்துள்ளது. சென்ற ஞாயிறுவரை இதன் யுஎஸ் வசூல் 216,872 டாலர்கள். நமது ரூபாய் மதிப்பில் ஏறக்குறைய 1.30 கோடி. ரஜினி, கமல், விஜய், அஜீத், சூர்யா, விக்ரம் படங்களுக்குப் பிறகு யுஎஸ்ஸில் ஒரு கோடிக்கு மேல் வசூலித்தது தனுஷ் படம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
 
யுகே மற்றும் அயர்லாந்தில் வேலையில்லா பட்டதாரி கடந்த ஞாயிறுவரை 70,659 பவுண்ட்களை வசூலித்துள்ளது. நமது ரூபாயில் ஏறக்குறைய 72.09 லட்சங்கள்.
 
ஆஸ்ட்ரேலியாவிலும் படத்துக்கு நல்ல வரவேற்பு. அங்கு இரு வாரங்கள் முடிவில் 63,076 ஆஸ்ட்ரேலிய டாலர்களை வசூலித்துள்ளது. இது சுமாராக 35.59 லட்சங்கள்.
 
மலேசியாவில் இரு வாரங்களில் ஒரு கோடியை படம் தாண்டியுள்ளது. கடந்த 27 ஆம் தேதிவரை இதன் மலேசியா வசூல் 1.41 கோடி.
 
வேலையில்லா பட்டதாரியின் இந்த வசூல் படம் வெளிநாடுகளில் பம்பர் ஹிட்டாகியிருப்பதை உறுதிபடுத்துகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்