தனுஷின் ‘பட்டாஸ்’ படத்தின் ரிலீஸ் தேதி! தனுஷ் ரசிகர்கள் குஷி!

வெள்ளி, 13 டிசம்பர் 2019 (22:07 IST)
தனுஷ் நடித்த ‘பட்டாஸ்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வந்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி ரிலீஸ் தேதி அறிவிப்பு குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது
 
சத்யஜோதி நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு நாளை மாலை 5 மணிக்கு வெளியாக இருப்பதாக சத்யஜோதி நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. இதனை அடுத்து இந்த படத்தின் ரிலீஸ் தேதியை தனுஷ் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஜனவரி மாதம் பொங்கல் தினத்தில் ரஜினியின் ‘தர்பார்’ வெளியாகவிருப்பதால் அதன்பின்னர் இரண்டு வாரம் கழித்து அதாவது ஜனவரி இறுதியில் ‘பட்டாஸ்’ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
 
‘வேலையில்லா பட்டதாரி’, ‘காக்கி சட்டை’, கொடி’ போன்ற படங்களை இயக்கிய துரைசெந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் தனுஷ், சினேகா, மெஹ்ரின் பிர்ஜதா, ஜெகபதிபாபு, முனிஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். விவேக்-மெர்வின் இசையில் ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவில் பிரகாஷ்பாபு படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது

Get ready fans ... #PattasMotionPosterTomorrow with the RELEASE DATE announcement at 5PM ! Let the clocks start ticking

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்