கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ், அமலாபால், இந்தி நடிகை கஜோல் நடிக்கும் படம் ‘வேலையில்லா பட்டதாரி 2’. மும்பையில் இந்த படத்தின் தமிழ், தெலுங்கு, இந்தி பட பாடல்கள், டிரைலர் வெளியீட்டு விழா நடந்தது.
மும்பை விழாவில் பேசிய தனுஷ், என் வாழ்க்கையில் மறக்க முடியாத படம் விஐபி. பொள்ளாச்சியில் படப்பிடிப்பு நடந்தபோது திடீரென ‘விஐபி 2’ கதைக்கான ஐடியா வந்து, கதையை எழுதினேன்.