தனுஷ் யாருடைய பிள்ளை? சான்றிதழ்களில் குழப்பம்; கவலையில் கஸ்தூரிராஜா

சனி, 11 மார்ச் 2017 (14:50 IST)
தனுஷின் சான்றிதழ்களில் குழப்பம் உள்ளதால் தற்போது கஸ்தூரி ராஜா பெரும் கவலையில் உள்ளார். 


 

 
தனுஷ் தங்கள் பிள்ளை என கதிரேசன் - மீனாட்சி தம்பதிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். சிறு வயதில் காணாமல் போன எங்கள் மகன்தான் தனுஷ் என கூறி வருகின்றனர்.
 
இந்த வழக்கில் அண்மையில் நீதிமன்றம், தனுஷை டிஎன்ஏ சோதனைக்கு உத்தரவிட்டது. மேலும் நீதிபதி தனியாக தனுஷிடம் விசாரணை நடத்தினார். தனுஷின் இயற்பெயர் வெங்கடேஷ்பிரபு என்றும், இதை தனுஷ் என மாற்றியதாகவும் தனுஷ் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
 
ஆனால் அவருடைய பள்ளி சான்றிதழில் அங்க அடையாளங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. இதனால் மீண்டும் சந்தேகம் எழுந்தது. இதையடுத்து கஸ்தூரிராஜாவின் பெயர் மாற்றத்திலும், சாதிச் சான்றிதழ்களிலும் பெரும் குழப்பம் உள்ளதாக கூறப்படுகிறது.
 
கஸ்தூரிராஜா 2015ஆம் ஆண்டுதான் கெஸட்டில் தனது இயற்பெயர் கிருஷ்ணமூர்த்தி என்பதை கஸ்தூரிராஜா என மாற்றியுள்ளார். 2003-ல் தனுஷ் எனப் பெயர் மாற்றம் செய்தபோது, தந்தை பெயர் கஸ்தூரி ராஜா என உள்ளது. 
 
இந்த சான்றிதழ் பிரச்சனை தற்போது கதிரேசன் - மீனாட்சி தம்பதிகளுக்கு சாதகமாக அமைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்