மீண்டும் மீண்டும் வா... - இது தனுஷ், சமந்தா சிச்சுவேஷன் சாங்

வியாழன், 17 டிசம்பர் 2015 (15:24 IST)
தங்கமகன் படத்தில் தனுஷின் ஜோடியாக நடித்துள்ளார் சமந்தா. படத்தில் இவர் தனுஷின் மனைவியாக வருகிறார்.


 
 
தங்கமகனில் இவர்களின் கெமிஸ்ட்ரி ஹன்ட்ரட் பர்சன்டேஜ் வொர்க் அவுட் ஆகியுள்ளது போலிருக்கிறது. மீண்டும் மீண்டும் சமந்தாவுடன் ஜோடி சேரப் போகிறார் தனுஷ்.
 
தனுஷ் தற்போது பிரபு சாலமன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். அதையடுத்து துரை செந்தில்குமார் இயக்கும் கொடி. அதன் பிறகு வெற்றிமாறனின் வட சென்னை.
 
வட சென்னையில் தனுஷுடன் சமந்தா நடிக்க உள்ளார். அதற்கு முன்னால் அவர் அண்ணன் செல்வராகவனின் இயக்கத்தில் நடிப்பார் என தெரிகிறது. அந்தப் படத்திலும் தனுஷ் ஜோடியாக சமந்தா நடிக்கயிருப்பதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் கூறுகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்