வைரலாகும் டிடியின் ரம்ஜான் ஸ்பெஷல் டான்ஸ் வீடியோ!

செவ்வாய், 26 மே 2020 (09:25 IST)
விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ஹீரோயின் ரேஞ்சுக்கு உச்சத்தை தொட்டவர் டிடி. அந்த நிகழ்ச்சிகளில் கிடைத்த அமோக வரவேற்பை வைத்து தற்போது ஒருசில படங்களிலும் நடித்து வருகிறார். காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியின் மூலம் பெரும் பிரபலமான இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தனது தொகுப்பாளர் பணியை செய்து வருகிறார்.எவ்வளவு பெரிய உச்ச நடிகராக இருந்தாலும் எந்த வித பயமும் இன்றி பட படவென அனல் பறக்கும் ரேப்பிட் பஃயர் கேள்விகளை கேட்டு உச்ச நடிகர்களை திக்குமுக்காட செய்திடுவார் டிடி.

சினிமா உலகை பொறுத்தவரையில் திறமைக்கு ஏற்ற அளவுக்கு அழகும் தேவை. அந்த விஷயத்தில் டிடி தன் திறமைக்கு ஏற்றவாறே பார்ப்பதற்கு அழகான முகபாவனையும் கொண்டிருப்பவர். விஜய் டிவியில் எத்தனையோ தொகுப்பாளினிகள் இருந்தாலும் ரசிகர்களின் என்றும் பேவரைட் தொகுப்பாளினியாக இருந்து வருவது டிடி தான். தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கும் speed Get Set Go என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

இதற்கிடையில் சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் டிடி அடிக்கடி தனது புகைபடங்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் நேற்று ரம்ஜான் பண்டிகையை வீட்டில் இருந்தபடியே தொழுகை செய்து ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த "ஜோத்தா அக்பர்" படப் பாடலுக்கு அமர்ந்தபடி நடனம் ஆடி அனைத்து முஸ்லிம் ரசிகர்கள் நண்பர்களுக்கு ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

EID MUBARAQ to all my muslim friends all around the world❤️keep us in ur PRAYERS. Wishing in with one of my Fav divine song of @arrahman sir #jodhaakbar of @iHrithik , spl wishes to u to Rahman sir ❤️
Ps: excuse my stiffness , got outa my leg cast only yesterday

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்