நடிகைகள் ஒரு படத்தில் நடிக்க விரும்பவில்லையெனில் முதலில் கையிலெடுக்கும் ஆயுதம், 'தேதி இல்ல சார்.' சமீபத்தில் இந்த ஆயுதத்தை மோகன்லால் படத்தில் பிரயோகித்தவர், வித்யா பாலன்.
மோகன்லால், மீனா நடித்துள்ள முந்திரிவள்ளிகள் தளிர்க்கும்போள் திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. மோகன்லால், மீனா பெர்பெக்ட் ஜோடி என்பதை இந்தப் படம் மீண்டும் நிரூபித்துள்ளது என ரசிகர்கள் கமெண்ட் எழுதி வருகிறார்கள்.
இந்த நேரத்தில் படத்தின் தயாரிப்பாளர் ஒரு குண்டை வீசியிருக்கிறார். அதாவது, மீனா நடித்த வேடத்திற்கு முதலில் வித்யா பாலனைத்தான் அணுகியிருக்கிறார்கள். அவருக்கும் கதையும், கதாபாத்திரமும் பிடித்திருக்கிறது. ஆனால், தேதி இல்லாததால் சாரி சொல்லி மறுத்திருக்கிறார்.