இசையமைப்பாளர் தர்புகா சிவா இயக்கிய படம்: ஓடிடியில் ரிலீஸ்

வெள்ளி, 7 ஜனவரி 2022 (18:53 IST)
இசையமைப்பாளர் தர்புகா சிவா இயக்கிய படம்: ஓடிடியில் ரிலீஸ்
தமிழ் திரை உலகின் இசையமைப்பாளர்களில் ஒருவரான தர்புகா சிவா ஒரு திரைப்படத்தை இயக்கி இருந்தார் என்பதும் ’முதல் நீ முடிவும் நீ’ என்ற அந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இந்த படம் தற்போது ஜனவரி 21ஆம் தேதி ஓடிடியில் ரிலீஸாக இருப்பதாகவும் ஜீ5 ஓடிடி நிறுவனம் இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை பெற்று இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
 
இசையமைப்பாளர் இயக்கிய முதல் திரைப்படம் ரசிகர்களின் மனதை கவரும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இந்த படம் முழுக்க முழுக்க ஒரு பள்ளியில் நடைபெறும் சுவராசியமான நிகழ்வுகள் கொண்ட படம் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்