உதயநிதிக்கு வில்லனாகும் டேனியல் பாலாஜி

செவ்வாய், 20 செப்டம்பர் 2016 (18:00 IST)
விஜய்யின் பைரவா படத்தில் வில்லனாக நடித்துவரும் டேனியல் பாலாஜி அடுத்து உதயநிதிக்கு வில்லனாகிறார்.

 
எழில், தளபதி பிரபு படங்களில் நடிக்கும் உதயநிதி தூங்காநகரம் கௌரவ் இயக்கத்திலும் ஒரு படம் நடிக்கிறார். மஞ்சிமா மோகன் நாயகி. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் டேனியல் பாலாஜி வில்லனாக நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.
 
இதுவரை உதயநிதி நடித்தப் படங்களிலிருந்து இந்தப் படம் முற்றிலும் வேறுபட்டிருக்கும் என்கிறார்கள். வரும் 26-ஆம் தேதியிலிருந்து உதயநிதியுடன் டேனியல் மோதவிருக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்