பிரபல நடிகை கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், மலையாள நடிகரான திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். அவருடைய இரண்டாவது மனைவியான நடிகை காவ்யா மாதவனுக்கும் இந்த வழக்கில் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் நிலையில், சிறையில் திலீப்பைச் சந்தித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை நடந்த சந்திப்பில், திலீப்பின் மகள் மீனாட்சி, காவ்யா மாதவனின் தந்தை மாதவன் ஆகியோர் உடன் இருந்துள்ளனர். சுமார் 20 நிமிடங்கள் நிகழ்ந்த இந்த சந்திப்பில், முதல் 5 நிமிடங்களுக்கு யாருமே ஒரு வார்த்தை கூட பேசவில்லையாம். மீனாட்சியையும், காவ்யா மாதவனையும் கட்டிப்பிடித்து கதறியிருக்கிறார் திலீப். தந்தையின் நினைவுதின பிரார்த்தனையில் பங்கேற்க, திலீப்புக்கு 2 மணி நேரம் அனுமதி வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.