குக்கர் வெடித்து சின்னா பின்னமான மணிமேகலையின் வீடு - வைரல் வீடியோ!

புதன், 19 பிப்ரவரி 2020 (12:09 IST)
சன் மியூசிகே தொலைக்காட்சியில் கடந்த 2010ம் ஆண்டு சூப்பர் ஹிட்ஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் மீடியாவில் நுழைந்தவர் தொகுப்பாளினி மணிமேகலை. அழகிய இரட்டையர்களாக அஞ்சனா மற்றும் மணிமேகலையின் நிகழ்ச்சி தமிழக இளைஞர்களை ஈர்த்தது. 
 
கல்லூரி படித்துக்கொண்டிருக்கும் போதே மணிமேகலைக்கு மீடியாவில் வேலை கிடைத்ததால் படித்துக்கொண்டே பேமஸ் ஆகிவிட்டார். அப்போது சமூகவலைத்தளங்களில் குறிப்பாக  ஃபேஸ்புக்கில் அவருக்கு நிறைய ஃபேன் பேஜ் இருந்தது. நிகழ்ச்சிக்கு பாட்டு கேட்பதற்காக போன் செய்வதை விட அவரிடம் பேசுவதர்களாகவே பல கூட்டம் போன் செய்வார். இதையடுத்து கடந்த 2017ம் ஆண்டு நடன கலைஞர் உசைன் என்பவரை  காதலித்து திருமணம் செய்துகொண்டனர். 
 
பெற்றோர்களை எதிர்த்து திருமணம் செய்துகொண்டதால் இந்த தம்பதி தனியாகவே வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மணிமேகலையின் வீட்டில் சமையல்கார அம்மா வராததால் அவரே குக்கரில் சாதம் செய்துள்ளார். பின்னர் விசில் வராமல் குக்கர் சிறுது நேரத்தில் வெடித்து சிதறியதால் சமையலறை நாசமாகியுள்ளது. இதனை உசைன் வீடியோ எடுத்து தனது இஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ...
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Ellam correcta panniyum indha cooker edhuku vedichuthu nu enaku ipo therinjaaganum ☝️ Enna paatha indha cooker ku epdi therithu

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்