CWC புகழுக்கு இப்படி ஒரு திறமை இருக்கா? இணையத்தில் கவனம் பெற்ற வீடியோ!

திங்கள், 20 ஜூன் 2022 (14:55 IST)
விஜய் தொலைக்காட்சியின் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி மூலமாக கவனம் பெற்றவர் புகழ்.

விஜய் டிவியில் மூன்று சீசன்களாக ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக புகழ் கலக்கி வருகிறார். இதன் மூலம் அவர் காமெடியனாக சில படங்களில் வாய்ப்பு கிடைத்தது. இதனைத்தொடர்ந்து தற்போது அவர் ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த படத்திற்கு ’மிஸ்டர் ஜூ கீப்பர்’ (Mr Zoo Keeper) என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு மார்ச் 20 முதல் ஊட்டியில் நடைபெற்று வருகிறது. அங்கு ஒரே கட்டமாக பெரும்பாலான காட்சிகளை படமாக்கி விட்டனர் படக்குழுவினர். இந்நிலையில் இன்னும் சில காட்சிகளை மட்டும் வெளிநாட்டில் படமாக்க உள்ளனராம். இதற்காக சமீபத்தில் படக்குழுவினர் பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு சென்று படப்பிடிப்பை நடத்தினர்.

இந்நிலையில் புகழ் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் குக் வித் கோமாளியின் மற்றொரு போட்டியாளரான சிவாங்கியோடு இணைந்து மேடையில் ‘தென்றல் வந்து தீண்டும்போது’ பாடலை பாடியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் இப்போது வைரலாகி வருகிறது.

 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vijay Tv Pugazh (@vijaytvpugazh)

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்